அடடே.. முக்கிய படத்தில் ஹீரோவா நடிக்க இருந்த அனிருத்.! இப்படி மிஸ் பண்ணிட்டாரே.?! - Seithipunal
Seithipunal


சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் உருவான போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின் நயன்தாராவுடன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்த பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது வரை அந்த காதல் நீடித்து வருகிறது.

இறுதியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம்  இந்தப் படம் வெளியாகியுள்ளது. சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய நானும் ரவுடி தான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அனிருத் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தில், அனிருத்தை நடிக்க சொல்லி விக்னேஷ் வற்புறுத்தியதாகவும், ஆனால், அவர்க்கு நடிக்க தயக்கம் இருந்ததால் அவர் தவிர்த்துவிட்டு கத்தி பட வேலையில் பிசியாகி விட்டதாகவும்  கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aniruth missed nanum rowdy dhan movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->