பாரதி கண்ணம்மா சீரியலால் அஞ்சலிக்கு இப்படி எல்லாம் நடந்துச்சா.! அவரே பகிர்ந்த தகவல்.!
anjali shares about her bk
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். அதிலும் சீரியலில் நடிக்கின்ற நடிகைகளுக்கு சமூக வலைதள பக்கங்களில் அதிக பாலோவர்கள் மற்றும் ரசிகர்கள் இருப்பார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் நடிகைகளுக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால்தான் விஜய் டிவி நடிகைகள் மற்றும் நடிகர்கள் பின்னாளில் வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகளாக ஒரு வருகின்றனர். அதே வரிசையில் பாரதிக்கண்ணம்மா சீரியலில் தற்போது நடித்து அஞ்சலியாக நடித்து வரும் கண்மணி மனோகர்க்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
சமீபத்தில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்த நிலையில், தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவது குறித்து நடிகை கண்மணி அஞ்சலி, "தான் எனது முதல் கதாபாத்திரம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது.
இந்த கதாபாத்திரத்திற்காக நான் நிறைய வாய்ப்புகளை இழந்தேன். என்னால் ஒரு நேரத்தில் ஒரு ப்ராஜெக்டில் தான் வேலை செய்ய முடியும். ஒன்றை 100% சரியாக கொடுப்பதுதான் எனது பாலிசி. எனவே, நான் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும்போது எந்த கமிட்மெண்ட்டும் எடுத்துக்கொள்ளவில்லை. மூன்று வருடங்கள் நிறைவு செய்த நிலையில் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
anjali shares about her bk