மீண்டும் பிரபாஸுடன் இணைய போகிறாரா அனுஷ்கா.?! வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை அனுஷ்கா. அனுஷ்கா 'பாகுபலி’ படத்தின் மூலம் தனது ரசிகர்கள் வட்டத்தை மேலும் பெரிதாக்கி கொண்டார்.

இவர்  `இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக பல மடங்கு தனது எடையைக் கூட்டி நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்துமுடித்த பின்னர், எடையை குறைக்க அவர் நிறையவே கஷ்டப்பட்டார். அந்த சமயத்தில், தான் மேற்கொண்ட பயிற்சிகளையும் முயற்சிகளையும் புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து கடைசியாக இவர் நடித்து வெளிவந்த படம், `பாகமதி’. அதன் பின்னர், சமீபத்தில் எடுத்த போட்டோஷூட்டில்தான் இவரை அவரது ரசிகர்கள் பார்க்க முடிந்தது. இவர் தற்போது, மாதவனுடன் `நிசப்தம்‘ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.இந்த நிலையில் இவர் நடிகர் பிரபாஸ் உடன் சேர்ந்து நடித்த பாகுபலி படம் மாபெரும் வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், பாகுபலி படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரியை பார்த்து உண்மையிலேயே இவர்கள் சேர்ந்தால் பிரமாதமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு இருந்தது.

அதற்கேற்றாற்போல அவர்கள் வெளியில் ஒன்றாக சுற்றி வந்ததால் அனைவரும் உண்மையில் இருவரும் காதலிக்கின்றனர் என்று கூறி வந்தனர். ஆனால் எங்களுக்குள் காதல் எல்லாம் கிடையாது என்று மறுத்த இருவரும் சில காலங்களாக ஒன்றாக இருப்பதை தவிர்த்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அனுஷ்கா நடிகர் பிரபாஸுடன் பட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டு வருகிறார் என்று அரசல் புரசலாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் பிரபாஸ் தற்பொழுது நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்கா இணையபோவதாக தகவல் கிடைத்துள்ளது. 

முன்பே மாளவிகா மோகனன், கீர்த்தி ஷெட்டி அந்த படத்தில் இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது நாயகியாக அனுஷ்காவும் இணைந்துள்ளார். இந்த தகவலை மூத்த நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anushka join with Prabhas movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->