இது என்னடா.! தனுஷ் படத்துக்கு வந்த சோதனை.?! யாரும் ஏமாந்துடாதீங்க - எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இரு மொழிகளில் வெளியாக இருக்கின்றது. இதனை தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிக்க வெங்கி அட்லூரி என்பவர் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் புத்தாண்டில் வெளியாக இருக்கிறது. 

இதற்கிடையில் ஆரண்யா சினி கம்பைன்ஸ் வாத்தி படத்தின் ப்ரடியூஸருடன் போட்டுள்ள ஒப்பந்தமானது நீதிமன்றம் வரை சென்று இருக்கிறது. இப்ப படத்தின் விநியோக நிறுவனமான ஆரண்யா சினி கம்பைன்ஸ் வாத்தி திரைப்படத்தை வாங்கி யாரும் ஏமாந்து விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளது.

ஆரண்யா சினி கம்பைன்ஸ் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "வாத்தி திரைப்படம் டிசம்பர் இரண்டில் வெளியாகும் என்று தெரிவித்த போது, ஐந்து வட்டாரங்களுக்கு இப்படத்தை வெளியிட 8 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு அக்டோபர் 18ல் ஐந்து கோடி முன்பணம் கொடுக்கப்பட்டது.

தயாரிப்பு நிறுவனமானது தீபாவளிக்கு பின் ஒப்பந்தம் போடலாம் என்று கூறியது. ஆனால், அதன் பின் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. படத்தை அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடவும் இல்லை. இதன் காரணமாக, கொடுத்த அட்வான்ஸௌ திருப்பி கேட்டோம். வட்டி இன்றி தர தயாரிப்பு நிறுவனம் சம்மதித்து, நவம்பரில் 2 கோடி மட்டும் கொடுத்தது.

பின் மூன்று நாட்கள் கழித்து ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறினார்கள். ஆனால் தரவில்லை. இப்படத்தை பிப்ரவரி 17-ல் வெளியிடுவதாக அறிவித்து இருக்கின்றனர். மீண்டும் நாங்களே வெளியிட முடிவு செய்து அணுகினோம். ஆனால் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. தற்போது இப்படத்தின் ஐந்து வட்டாரங்களின் விநியோக உரிமை எங்களுக்கு இருப்பதால் இடைத்தரர்களின் பேச்சைக் கேட்டு மற்ற விநியோகஸ்தர்கள் வாங்கி ஏமாந்து விட வேண்டாம்." என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aranya Cine campaign about vaathi Film


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->