தமிழகத்தில் பொற்கால ஆட்சியா! ஏளனமாக சிரித்த CPIM தலைவர்! வைரலாக வீடியோ! - Seithipunal
Seithipunal


ஆளும் திமுக அரசுக்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சி ஆரம்பத்தில் கடும் விமர்சனத்தை முன்வைத்த நிலையில், தற்போது விமர்சனத்தை நிறுத்திவிட்டு, முழு நேரமும் தங்களது ஆதரவை கொடுக்க தொடங்கியுள்ளது.

இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி கொண்டு ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளது. அவ்வப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வந்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, திமுகவினருக்கு போட்டி கொடுக்கும் அளவிற்கு, திமுகவினாரே அசந்து போகும் அளவிற்கு தமிழக அரசை பாராட்டி புகழ்ந்து தள்ளி வருகிறார்.

மேலும், ஏதேனும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினால், விமர்சனம் செய்தால், முதல் ஆளாக வந்து கண்டனமும், பதிலடியும் கொடுக்க கொடுத்து வருகிறார். 

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் தொடர்ந்து திமுக மீது விமர்சனத்தை குறைக்காமல் தெரிவித்துக் கொண்டே இருக்கிறது.

தற்போது அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் பொறுப்பேற்றுள்ள சண்முகம், அடுத்தடுத்து செய்தி ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளில், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக "தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது போலவும், அதற்க்கு இடையூறு செய்யும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுவது போலவும் நினைக்கிறார்கள்" என்று அவர் சிரித்துக் கொண்டே சொல்ல, நெறியாளருக்கு ஏளனமாக சிரிக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MK Stalin CPIM ADMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->