இதுதான் திமுகவின் சாதி அரசியல்! திமுக நிர்வாகியின் காணொளி வைரல்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, தமிழக வெற்றி கழகம் போட்டியிடாத சூழ்நிலையில், தற்போது களத்தில் நாம் தமிழர் கட்சியும், திமுக மட்டுமே உள்ளன. 

மேலும் சுயேச்சை வேட்பாளர்கள், சில சிறிய கட்சிகள் களமிறங்கி போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் தேமுதிக எம்எல்ஏ சந்திரசேகர், செங்குந்த முதலியார் என்பதாலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அந்த சாதியினர் அதிக அளவில் இருப்பதாலும், அவர் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் உள்ளதாக, திமுகவை சேர்ந்த பிரபல நிர்வாகி ஜெயராமன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் திமுக வேட்பாளருக்கு செங்குந்த முதலியார் சாதி சங்கம் முழு ஆதரவை தருவதாக சொல்லக்கூடிய ஒரு காணொளி ஒன்றையும் ஜெயராமன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் பதிவு விவரம்:

"நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் செங்குந்த கைக்கோள முதலியாருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு வாய்ப்பு அளிக்கும் கட்சியில் போட்டியிடும் நமது செங்குந்த கைக்கோள முதலியார் வேட்பாளருக்கு ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் முழு ஆதரவளித்து அந்த வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதென்றும் மாவட்ட பொதுக்குழுவில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் 
திரு.சந்திரகுமார் அவர்கள் செங்குந்த முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்..

திரு.சந்திரகுமார் அவர்கள் இல்ல திருமணத்திற்கு வந்திருந்த தலைவர் 
தளபதியார் அவர்கள்  செங்குந்த முதலியார் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டி கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

இன்று திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு நாள் அவரை வணங்குவோம்.." என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகி ஜெயராமனின் இந்த பதிவிற்கு திமுகவை சேர்ந்தவர்களே கடுமையான கண்டனத்தையும், விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர். மேலும் எதிர்கட்சிகளை சேர்ந்தவர்களும் இதுதான் திமுகவின் சாதி அரசியல் என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode East Election DMK Viral video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->