அடடே... செம்ம அப்டேட்... லியோ திரைப்படம் ரிலீஸ் பற்றி சூசகமாக தெரிவித்த அர்ஜுன் தாஸ்.! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலைமை வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. தளபதி விஜயுடன் திரிஷா, அர்ஜுன்  சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன்,மன்சூர் அலிகான்  இவர்களுடன் பாலிவுட்  இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியது. மேலும் இந்த திரைப்படத்தினை பற்றிய புதிய அப்டேட் ஒன்றை கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்திருக்கிறார் நடிகர் அர்ஜுன் தாஸ்.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்திருக்கும் இவர் லியோ திரைப்படத்தின் கதை விவாதம் தொடர்பான  கலந்துரையாடலில் தானும் பங்கு பெற்றதாகவும் யார் யாருக்கு என்ன கதாபாத்திரம் என்று தனக்குத் தெரியும் எனவும் கூறி இருக்கிறார். மேலும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெடிக்கப் போகிறது எனவும் அதிர்ச்சியான அப்டேட்டை கொடுத்திருக்கிறார். மேலும் லியோ படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு  அக்டோபர் 19ஆம் தேதி தெரிந்து கொள்ளுங்கள் என சூசகமாக பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arjun Das gave a shock to the question about the movie Leo that theaters are going to explode on October 19


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->