அருண் விஜய் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


தமிழில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். பின்னர் இவர் பாண்டவர் பூமி, இயற்கை, மலைமலை போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். 

ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிஷன் சேப்டர் 1. எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை, சினம் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 

இதனால் மிஷன் சேப்டர் 1 'அச்சம் என்பது இல்லையே' திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arun Vijay Movie Release Update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->