தமிழகத்தை சேர்ந்த இருவர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இருவர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டம் மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த மல்லிகா( 55) நேற்று (ஜன.8) ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்புக்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்துக்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தத் துயரமான செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் உடனடியாகத் தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த மல்லிகாவின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin order for Thirupathy accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->