தொடரும் அட்டூழியம் - 10 தமிழக மீனவர்கள் கைது.!
srilangan navy arrested ten tamilnadu fisherman
சமீப காலமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நாகபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மேலும், அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைநகரில் கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
srilangan navy arrested ten tamilnadu fisherman