#Biggboss 6 : இந்த வாரம் வெளியேறும் நடிகை இவர் தானாம்.? வெளியான தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து, 6வது சீசன் வரை வந்துள்ளது. 6 வது சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. 

20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நிறைய சண்டை சச்சரவுகள் இருந்து வருகின்றன. இதில் 21ஆவது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைந்தார். இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நபராக இருந்த ஜி.பி.முத்து தானாகவே வெளியேறினார். 

அதைத் தொடர்ந்து சாந்தி, அசல் கோளார், ஷெரீனா, VJ மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சீ உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பல வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் வைல்ட் கார்டு என்ட்ரியாக புதியவர்கள் யாரும் நுழையவில்லை.

இந்த நிலையில், இந்த வார எலிமினேஷனில் யார் வெளியேறுவார்கள் என்ற ஓட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி ராம் மற்றும் ஆயிஷா இருவரும் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர். இதில், ஆயிஷா வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayisha may leave Bb 6 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->