திமுக அரசுக்கு மக்களிடம் ஆதரவு அலை வீசுகிறது - சட்டத்துறை அமைச்சர் பேட்டி!
DMK minister Raghupati say about DMK government TN people
இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக அரசின் நிலைமை மற்றும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.
அதில், தமிழகத்தில் திமுக அரசுக்கு மக்களிடம் உறுதியான ஆதரவு உள்ளதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, 2026 பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
அ.தி.மு.க. தற்போது குழப்ப நிலையில் இருப்பதால், தமிழக மக்களுக்கு மாற்றுக்கருத்தாக அமைய முடியாது. எதிர்க்கட்சி எந்த அளவுக்கு விமர்சனம் செய்தாலும், மக்களிடம் திமுகவுக்கு நிலையான நம்பிக்கை இருப்பதை கருத்துக்கணிப்புகள் உறுதி செய்கின்றன. தற்போதைய அரசின் செயல்பாடுகளால், தமிழக மக்கள் திருப்தியாக உள்ளனர்.
அவர் மேலும் கூறுகையில், ஆட்சியில் தவறுகள் ஏற்பட்டால் முதல்வர் உடனடியாக சரிசெய்து வருகின்றார். எந்த அரசியல் கட்சிக்கும் விமர்சனங்கள் இயல்பானவை. ஆனால், திமுக அரசு மக்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறது.
அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், எதிர்க்கட்சிகள் இணைந்தாலும் திமுகவின் வாக்கு வங்கி குறைய முடியாது.
மேலும், காவல்துறை அதிகாரி மீது எழுந்த பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், அரசு எந்த தவறும் கவிழ்த்துவிடாது எனவும் அவர் தெரிவித்தார்.
English Summary
DMK minister Raghupati say about DMK government TN people