இதுமட்டும் இல்லனா ரஜினியால் சினிமால தாக்குப்பிடிக்க முடியாது - சர்ச்சையை கிளப்பிய பிரபல இயக்குனர்.!
director ram gobal varma speech about actor rajinikant
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை விமர்சித்து இயக்குநர் ராம்கோபால் வர்மா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா அளித்த பேட்டியில் தெரிவித்து இருப்பதாவது:-
![](https://img.seithipunal.com/media/rajini1-2rps5.jpg)
"ஒரு நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.
Slow Motion மட்டும் இல்லையென்றால் ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. பாதி படம் முழுக்க எதுவும் செய்யாமல் ரஜினி ஸ்லோ மோஷனில் நடப்பதை பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள். அதனால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
English Summary
director ram gobal varma speech about actor rajinikant