பாகிஸ்தானிலிருந்து வாகா எல்லை வழியாக 1,000 இந்தியர்கள் வெளியேற்றம்..!
1000 Indians evacuated from Pakistan via Wagah border
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில், சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதனை தொடர்ந்து, இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மருத்துவ விசாவில் இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் (29-ஆம் தேதி) வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எஞ்சிய பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்து விட்டது.

இதேவேளை, இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் வசித்து வந்த இந்தியர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் 30-ஆம் தேதிக்குள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 06 நாட்களில் பாகிஸ்தானில் இருந்து 1,000 இந்தியர்கள் வாகா எல்லை வழியாக வெளியேறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து தற்போது வரை 800 பாகிஸ்தானியர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
1000 Indians evacuated from Pakistan via Wagah border