ரஞ்சித் வந்ததால்.. பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகிய கோபி.?! வருத்தத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில்  ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் வெற்றிகரமாக  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்தத் தொடருக்கு என்று சின்னத்திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

 டி ஆர் பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருக்கும் இந்தத் தொடர்  மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு பெண் தன் கணவரால் கைவிடப்பட்டாலும் அவர் எவ்வாறு முன்னேறுகிறார் என்பதை இந்தத் தொடர் காட்டுகிறது.

பாக்கியலட்சுமி கைவிட்ட அவரது கணவர் கோபி இப்போது ஏன் அவளை நாம் கைவிட்டோம் என்று  என்னும் அளவிற்கு பாக்கியலட்சுமி தனது வாழ்க்கையில் பல சவால்களையும் சந்தித்து  வெற்றிகரமாக முறியடித்து வருகிறார்.

இந்தத் தொடர் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சூழலில்  கோபியாக நடித்து வரும் சதீஷ்  இனி நான் பாக்கியலட்சுமி தொடரில் அவ்வளவாக வரப்போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக வந்திருக்கும் ரஞ்சித்திற்கு உங்கள் ஆதரவை கொடுங்கள் என வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். 

இந்த வீடியோ பாக்கியலட்சுமி இவரை  பழிவாங்குவதை காண ஆவலாகயிருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. சதீஷ் மலையாள  தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருப்பதால்  அவர் கேரளாவில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakyalakshmi fame actor satheesh withdraws from the serial he explains the reason


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->