திருமணம் ஆகாத விரக்தி; விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சலூன் கடைக்காரர்..! - Seithipunal
Seithipunal


திருமணம் ஆகாத விரக்தில் நபர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த அங்கமுத்துவின் மகன் பிரகாஷ் (வயது 36). 

சலூன் கடை நடத்தி வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு உறவினர்கள் பல இடங்களில் பெண் தேடியும் பெண் கிடைக்கவில்லை, ஆதலால் திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருந்துள்ளது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ளார் பிரகாஷ். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். அதன் பின்னர் தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், பிரகாசை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பிரகாஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பான  புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The salon shopkeeper who committed suicide by consuming poison in frustration over not getting married


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->