ஃபிளைட்டில் பாக்கியலட்சுமி ஜெனி கொடுத்த 'பளார்'! அத்துமீறி நடந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணியிலிருந்து 9 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடராகும்.

இந்தத் தொடரில் பாக்யாவாக நடித்திருப்பவர் சுசித்ரா செட்டி இந்தத் தொடரில் பாக்கியாவின் கணவராக வரும் கோபி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திவுள்ளார். மேலும் இந்த தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்திருக்கிறார்.

திவ்யா கணேஷ் ஒரு விமான பயணத்தின் போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் "ஹைதராபாத்திலிருந்து தான் சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். என் மீது ஏதோ ஊருவது போன்றிருந்தது உடனே நான் எழும்பி சோதனை செய்து பார்த்ததில் எதுவும் இல்லை. மீண்டும் என் இருக்கையில் அமர்ந்த போது   மறுபடியும் அந்த கை வந்தது. உடனே அந்த கைகளைப் பிடித்து 'பளார்' என்று ஒரு அரை விட்டேன். 

அந்த நபர் அலறிவிட்டார் எந்த ஒரு விஷயங்களையும் எளிதாக கடந்து சென்று விடக்கூடாது. இது போன்று  பெண்களுக்கு மோசமான சம்பவங்கள் நடக்கலாம்  நாம் எதையும் சகித்துக் கொண்டு இருக்கக் கூடாது. உடனுக்குடன் அதற்கான நியாயங்களை கொடுத்து விட வேண்டும் என கம்பீரமாக தெரிவித்து இருக்கிறார்  திவ்யா கணேஷ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakyalakshmi fame dhiya was molested in a flight she expained in an interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->