மீண்டும் குடும்ப சண்டை.. கூறுபோட திட்டமிட்ட பிக் பாஸ்.! காத்திருக்கும் தரமான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் தாடி பாலாஜி தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கு முன்பு அவர் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 2 கலந்து கொண்டார். அப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய மனைவி நித்யாவும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டபோது இருவருமே விவாகரத்துக்கு அப்ளை செய்திருந்தனர். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது தனது மனைவியை பாலாஜி தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி எகிறியது.

தற்போது மீண்டும் பாலாஜி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். கடந்த வாரம் இவர் தனது மனைவி குறித்து மீண்டும் தகாத முறையில் பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி நித்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாலாஜியை மிகவும் மோசமாக விமர்சித்து பிக் பாஸ் என்னை வைல்ட் கார்டு மூலம் உள்ளே அனுப்பினால், பாலாஜியை கிழித்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாலாஜி தனது மகள் மீது பாசம் இருப்பது போல சில கருத்துகளை தெரிவித்தார். அதற்கு அவரது மகளும் அப்பா நடிக்கிறார் அவர் உண்மையில் அப்படிபட்டவர் இல்லை என்று தெரிவித்துள்ளார். நித்யா கோரிக்கை வைத்தது போல பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவரை வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைக்க விஜய் டிவி குழு தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் குடும்ப சண்டையை தெருவுக்கு இழுத்து தனது டிஆர்பியை அதிகரிக்க தொலைக்காட்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Balaji wife arrivel on BB ultimate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->