அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவிக்கப்பட்டது நாதக.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகள் பெற்றது. இதனால் அந்தக் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் அறிவித்ததை கட்சி தலைமை கடிதம் வாயிலாக வெளியிட்டுள்ளது.   

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- "கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகள் பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை கடிதம் வாயிலாக நேற்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாம் தமிழர் கட்சி விவசாயி அல்லது புலி ஆகியவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்க பரிந்துரை செய்திருந்தது. 

ஆனால் இந்த சின்னங்கள் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் அல்லது விலங்குகளை அடையாளம் காட்டுவது போல் இருப்பதால், தேர்தல் ஆணையத்தில் உள்ள மற்ற ஏதவாது ஒரு சின்னத்தை பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission announce ntk recognized state party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->