டிக்கெட் மோசடி நிறுத்தப்படவேண்டும்.. ரெயில்வே துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
Ticket fraud must stop Supreme Court Directs Railways
டிக்கெட் வழங்கும் முறையில் முறைகேடு செய்வது நிறுத்தப்படவேண்டும்'' என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திபங்கர் தத்தா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
ரயில்களில் உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை செல்போன் செயலிகள் மூலம் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்திருந்தநிலையில் நாடு முழுவதும் 12 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர் .
உத்திரபிரதேசம், பீகார் ,குஜராத் ,மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த இந்த சோதனையில் மோசடி சாப்ட்வேர் அடங்கிய செல்போன்கள் டிஜிட்டல் பொருள்கள் என முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஏராளமான உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் இது தொடர்பாக ரெயில்வே இணையதளத்தில் போலி அடையாள எண்களை உருவாக்கி, டிக்கெட் எடுத்து விற்றதாக 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் மேல்முறையீடு செய்தனர்.
அப்போது அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் திபங்கர் தத்தா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ''நாட்டின் உள்கட்டமைப்புகளில் ரெயில்வே முக்கியமானது என்று கூறினர்.மேலும் ஆண்டுதோறும் 673 கோடி பயணிகளை ரெயில்வே ஏற்றிச் செல்கிறது என்றும் அதன் டிக்கெட் வழங்கும் முறையில் முறைகேடு செய்வது நிறுத்தப்படவேண்டும்'' என்று கூறினர்.
English Summary
Ticket fraud must stop Supreme Court Directs Railways