ஆபாச பட நடிகைக்கு பணம் வழங்கிய விவகாரம்..  தண்டனையில் இருந்து தப்பிய டிரம்ப்!  - Seithipunal
Seithipunal


ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு டிரம்ப் நிபந்தனையின்றி விடுவித்து உத்தரவிட்டு உள்ளது நீதிமன்றம். குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு சிறை தண்டனையோ அபராதமோ எதுவும் விதிக்காமல் விடுவித்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உள்ளது. 

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக வரும் 20-ந்தேதி பதவி ஏற்கஉள்ளார்.  முதன் முறையாக 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப்  ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது, மேலும் டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக தொடர்ந்து பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனால், தனக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய டிரம்ப், ஸ்டாம்மி டேனியல்ஸ் மேலும் தகவல் ஏதும் கூறாமல் இருக்க பணத்தை வாரி கொடுத்து ஸ்டார்மி வாயை அடைத்துள்ளார். இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்திற்கு முறைகேடாக பொய் கணக்கு எழுதியதாக டொனால்டு டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு, நியூயார்க்கின் மேன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வழக்கு நடைபெற்றுவந்தது. மேலும் இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து இதற்கான தண்டனை அறிவிப்பும்  ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று வரும் 20-ந்தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்க இருக்கும் நிலையில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ஜனவரி 10-ந்தேதி (உள்ளூர் நேரப்படி) தண்டனையை அறிவிக்க உள்ளதாக நியூயார்க்கின் மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் அறிவித்து இருந்தார்.

அதன்படி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, டிரம்ப்-ஐ நிபந்தனையின்றி விடுவித்து உத்தரவிட்டு உள்ளார். மேலும் குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு சிறை தண்டனையோ அபராதமோ எதுவும் விதிக்காமல் விடுவித்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . முன்னதாக சிறை தண்டனை வழங்கப்படாது என நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் தற்போது அபராதமும் விதிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார். அபராதம் விதிக்கப்படாத நிலையிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாகும் முதல் நபர் டொனால்டு டிரம்ப் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது .

முன்னதாக இந்த வழக்கில் தண்டனையை அறிவிப்பை நிறுத்தி வைக்கக்கோரி நியூயார்க் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் முறையீடு செய்திருந்த நிலையில்  இரண்டு நீதிமன்றங்களும் டொனால்டு டிரம்பின் மனுக்களை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 actress paid for money  Trump escapes punishment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->