தனது மறுமணம் குறித்து ஓபனாக பேசியா பவானி ரெட்டி.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  பிரபல நிகழ்ச்சி தான் "பிக்பாஸ்". இந்த நிகழ்ச்சிக்கு முதல் எபிசோடில் இருந்தே நிறைய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இதனால் தான் தற்போது இந்த நிகழ்ச்சி 5வது சீசன் வரை வந்துள்ளது. 

சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு பிக்பாஸ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தவர் தான் நடிகை பாவனி ரெட்டி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பவானி ரெட்டி சில சீரியல்களிலும் நடித்து இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் இன்ஸ்டாகிராம் லைவில் பேசியுள்ளார். அப்போது ரசிகர்கள் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்,

அதில், ஒருவர் அடுத்ததாக எந்த சீரியலில் நடிக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பவானி ரெட்டி "இனி நான் சீரியல்களில் நடிக்க போவதில்லை." என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கின்றது. அத்துடன், திருமணம் குறித்த கேள்விக்கு 'இனி என் வாழ்வில் திருமணம் கிடையாது' என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bavani reddy about remarriage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->