திருப்பதி தேவஸ்தானம் சாமானிய பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் - பவன் கல்யாண்.!
deputy minister pawan kalyan speech about peoples died in tirupathi
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு டோக்கன் வழங்கப்பட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று முன்தினம் இரவு 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருப்பதி குற்றப்பிரிவு தேவஸ்தான டி.எஸ்.பி. ரமணகுமார், கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல், போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, தலைமை பாதுகாப்பு விஜிலென்ஸ் அதிகாரி ஸ்ரீதர், ஜே.இ.ஓ கவுதமி உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தற்காலிக வேலை வழங்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், துணை முதல்வர் பவன் கல்யாண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர், " சாமானிய மக்களின் நடைமுறைகளை கையாளுவதற்கான வழிமுறை இது இல்லை.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதன் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, சாமானிய பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். இதனை தேவஸ்தானத்தின் தலைவருக்கு நான் வேண்டுகோளாக விடுக்கிறேன்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
deputy minister pawan kalyan speech about peoples died in tirupathi