பீஸ்ட் பட ஆடியோ ரிலீஸ் என்னாச்சு..? படக்குழு முடிவால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இந்த படத்தின் அரபிக் குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கே ஜி எப் படத்திற்கு முன்பே பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 20-ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த முறை மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் போது கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. மேலும், தற்போது கரோனா வைரஸ் பரவும் அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று படக்குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beast audio launch may stopped


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->