விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிக்கெட் கட்டணம் உயர்கிறது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  இந்த படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ கிம்தானா பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்திற்கான டிக்கெட் விலையை மூன்று மடங்கு வரை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, மூன்று மடங்கு டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beast movie ticket price are rising


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->