மனைவி பிரிவு, மன உளைச்சல்; விஷம் கலந்த குளுக்கோஸ் ஏற்றி டாக்டர் தற்கொலை..!
Doctor commits suicide by ingesting poisoned glucose
வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் டாக்டர் மணிகண்டன் 32. இவருக்கும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனால் மணிகண்டன் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் படுக்கையில் மணிகண்டன் கையில் குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளார்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில், மணிகண்டன் மனைவியை பிரிந்த மன உளைச்சலில் விஷம் கலந்த குளுக்கோசை உடலில் ஏற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
English Summary
Doctor commits suicide by ingesting poisoned glucose