துருவ நட்சத்திரம் திரைப்பத்திற்கு யாரும் உதவவில்லை; கவுதம் வாசுதேவ் மேனன் கவலை..! - Seithipunal
Seithipunal


நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. 2016 ஆம் ஆண்டு இப்படம் ஆரம்பிக்கப்பட்டது.

நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படக்குழுவால் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.


.
இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் தற்பொழுது மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் டோமினிக் லேடிஸ் பர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சில விஷயத்தை அவர் பகிர்ந்துள்ளார். 

அதில் அவர் " துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக சூழ்நிலையில் இருக்கும் போது யாரும் எனக்கு உதவவில்லை. யாரும் அதைப்பற்றி கண்டுக்க கூட இல்லை. ஒரு திரைப்படம் வெற்றிப்பெற்றால் அதை ஓ அப்படியா என கேட்பார்கள். அதற்கு யாரும் சந்தோஷம் அடைய மாட்டார்கள்.

தாணு சார், லிங்குசாமி, இந்த இருவர் மட்டுமே எனக்கு கால் செய்து பேசினர். இத்திரைப்படத்தை நான் தயாரிக்கவில்லை. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பார்ப்பு மற்றும் அவர்கள் காட்டும் அன்பு மட்டுமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டு இருக்கிறது." என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No one helped Dhruva Nathakiram film Gautham Vasudev Menon


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->