பென்ஸ் பட அப்டேட்! ராகவா லாரன்ஸ்க்கு வில்லனாக பகத் பாசில்! - Seithipunal
Seithipunal


ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு வில்லனாக எஸ்.ஜே சூர்யா மற்றும் பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ். தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். பைட் கிளப் என்ற படத்தை தயாரித்தார்.

தற்போது பென்ஸ் என்ற புதிய படத்தை தயாரிக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, பென்ஸ் படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். அவருடன் இன்னொரு வில்லனாக பகத் பாசிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ராகவா லாரன்ஸ் உடன் எஸ்.ஜே சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர்.

அந்த வகையில் ராகவா லாரன்ஸ் பகத் பாசிலியுடன் முதன் முறையாக நடிக்க உள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வரும் எஸ்.ஜே சூர்யாவும் பகத் பாசிலும் ஒன்றாக இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்கள் இடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benz movie update Bhagat Basil as villain for Raghava Lawrence


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->