ஓப்பன்ஹைமர் படத்தில் சர்ச்சையை கிளப்பிய பகவத் கீதை வசனம்- வலுக்கும் கண்டனங்கள்!! - Seithipunal
Seithipunal


அணு ஆயுதத்தின் தந்தை என அழைக்கப்படும் அமெரிக்க விஞ்ஞானி ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு, எடுக்கப்பட்ட ஓம்மட்ஹைமர் படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்த படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதில் பகவத் கீதை வசனம் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த வசனம் திரைப்படத்தில் படுக்கை அறை காட்சியில் இடம்பெற்றிருப்பது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. படுக்கை அறை காட்சியில் பகவத் கீதை வசனத்தை வைத்து இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக சிலர் குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர். 

இந்து மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் தணிக்கை குழு மீது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திரைப்படத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள சேவ் கல்ச்சர் சேவ் இந்தியா பவுண்டேஷன் அமைப்பு, "பாலியல் உறவு கொள்ளும்போது, ஆணின் மீது ஏறி அமர்ந்து, பெண் ஒருவர் அவரை பகவத் கீதையில் வரும் வசனத்தை உரக்க  சொல்ல வைக்கிறார். இப்படி காட்சி அமைக்கப்பட்டுள்ளதை கடுமையாக கண்டிக்கிறோம். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்" என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bhagavad Gita in Oppenheimer film turned controversy condemnation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->