தல தல-னு உயிர விட்டுடான்.. அவங்க வீட்டுக்கு யாருமே இல்ல.. உயிரிழந்த அஜித் ரசிகரின் நண்பர்கள் உருக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜித்குமார் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் 8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

அஜித் குமார் நடித்த துணிவு படத்தையும், விஜய் நடித்த வாரிசு படத்தையும் அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று நள்ளிரவு 1 மணிக்கு அஜீத் ரசிகர்களுக்கான துணிவு படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அதேபோன்று விஜய் நடித்த வாரிசு திரைப்படத்திற்கான சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க சிந்தாதிரிப்பேட்டை அடுத்த ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் சென்றுள்ளார். அப்பொழுது பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டு இருந்த லாரியின் மீது ஏறி நடனமாடியுள்ளார். இதில் அவர் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்த அஜித் ரசிகரின் நண்பர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், தல தல-னு அவன் உயிரையே விட்டுட்டான். இனிமே அவங்க குடும்பத்தை யார் பார்த்துக்கறது. அவனை நம்பி தான் அவங்க குடும்பமே இருந்தது என உருக்கமாக பேசியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த பரத்குமார் சித்தி பேசியதாவது, நடிகர்களை தீவிரமாக நேசிக்கலாம், ஆனால், அவர்களுக்கு மேல் பெற்றோர்களை நேசிக்க வேண்டும். பிடித்த நடிகர்களுக்காக பாலாபிஷேகம் செய்வது, கட் அவுட் வைப்பது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என நடிகர்கள் ரசிகர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ரசிகர் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தை அஜித், விஜய் பார்ப்பார்களா என உயிரிழந்த பரத் குமாரின் சித்தி ஆதங்கமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat Kumar friends speech about Ajith fan death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->