பிக்பாஸ் வைல்டு கார்டில் வந்து டைட்டில் வின்னர் ஆன முதல் பெண்.!  - Seithipunal
Seithipunal


மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் கிட்டத்தட்ட அதன் கிளைமாக்ஸை நெருங்கியது. அதனால், இந்த வாரம் எலிமினேட்டாகி வெளியே சென்ற பலரும் வீட்டிற்குள் வந்து தங்களது முன்னாள் போட்டியாளர்களுடன் விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு, வெளியில் புறப்பட்டனர். 

இந்த நிலையில் மணி, அர்ச்சனா, தினேஷ், மாயா, விஷ்ணு உள்ளிட்டோர் இறுதியாக பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். இவர்களுக்கு இடையே போட்டிகளும் கடுமையாக இருந்தது. அதேபோல் வாக்கு பங்களிப்பும் கடுமையாக இருந்தது. இதற்கான இறுதி அறிவிப்பு ஜனவரி 13ஆம் தேதியான நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், அர்ச்சனா அதிக வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் சீசன் 7 தமிழின் டைட்டில் வின்னர் ஆனார். அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் மணியும், மூன்றாவது இடத்தில் மாயாவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வைல்டு கார்டு ரவுண்டில் வந்து முதன்முதலாக, தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளர் முதன்முறையாக டைட்டில் வின்னர் ஆனது இதுவே முதல்முறை. 

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் தமிழ் 7 வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்ச தொகை வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss tittle winner announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->