பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்..வெளியேறியது அமெரிக்கா:டிரம்ப் அதிரடி!  - Seithipunal
Seithipunal


பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை இரண்டாவது முறையாக விலக்கிக் கொள்வதற்கான உத்தரவில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.

சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப் படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. அந்தவகையில் புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்து வதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு பாரிஸில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் முதலில் இணைந்த அமெரிக்கா, டிரம்ப் ஆட்சி காலத்தின் போது விலகுவதாக அறிவித்தது. இதையடுத்து வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இந்த ஒப்பந்தம் இருப்பதாக விமர்சித்து வந்த டிரம்ப், பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்த சூழலில் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.இந்தநிலையில் இன்று அமெரிக்க புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள  டொனால்டு டிரம்ப்,பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து  பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை இரண்டாவது முறையாக விலக்கிக் கொள்வதற்கான உத்தரவில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து, காலநிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் 2015-ம் ஆண்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான தனது நோக்கத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்து, டொனால்டு டிரம்ப் ஒரு முறையான கடிதத்தில் கையெழுத்திட்டார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Paris Climate Agreement Trump Leaves America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->