சட்டவிரோத முன்பதிவு டிக்கெட்... 4,975 பேர் கைது!
Illegal booking tickets 4,975 People Arrested
சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.மேலும் தட்கல் மற்றும் பல்க் புக்கிங்-கில் முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டறிந்து 26,442 இணையதள ஐ.டி.கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வேவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-இந்தியா முழுவதும் ரெயில்வேயில் போலி டிக்கெட் முகவர்கள் மற்றும் கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பாக, ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வேயின் வணிக பிரிவு அதிகாரிகள், ஐ.ஆர்.சி.டி.சி. ஆகியவை இணைந்து இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளது.
மேலும், டிக்கெட் கவுன்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஒரே நேரத்தில் பெருவாரியான டிக்கெட்டுகளை எடுப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ள தெற்கு ரெயில்வே,அதன்படி, கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நடத்திய பல்வேறு கட்ட சோதனைகளில், சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக மொத்தம் 4 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட 4 ஆயிரத்து 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மேலும் இது தொடர்பாக ரூ.53 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 1,24,529 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் இதுதவிர, தட்கல் மற்றும் பல்க் புக்கிங்-கில் முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டறிந்து 26 ஆயிரத்து 442 இணையதள ஐ.டி.கள் முடக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Illegal booking tickets 4,975 People Arrested