ரூ.100 கோடி குவித்த மார்க் ஆண்டனி!! இயக்குனருக்கு காரை பரிசாக வழங்கிய தயாரிப்பாளர்!! - Seithipunal
Seithipunal


ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் மினி ஸ்டூடியோவின் வினோத்குமார் இந்த படத்தை தயாரித்திருந்தார். டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த மார்க் ஆண்டனி திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மார்க் ஆண்டனி படம் வெளியாகி 19 நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. வெறும் ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தபடம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதை அடுத்து இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனுக்கு தயாரிப்பாளர் வினோத்குமார் பிஎம்டபிள்யு சொகுசு காரை பரிசளித்துள்ளார். இதை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் தயாரிப்பாளர் வினோத்குமார் மற்றும் நடிகர்கள் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bmw car presented to Mark Antony director adhik ravichandran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->