செல்ஃபி எடுத்தே கின்னஸ் சாதனை செஞ்ச அக்‌ஷய்குமார்.! அடடே.. இப்படி தானா.?!  - Seithipunal
Seithipunal


பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்சய் குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் படம்  'செல்ஃபி'. இந்தத் திரைப்படத்திற்கான பிரமோஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்திரைப்படத்தில் அக்ஷய் குமாருடன், இம்ரான் ஹாஷ்மி, மிருனாள் தாக்கூர், யோயோ ஹனி சிங் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்வுகளின் போது புதிய உலக சாதனை ஒன்று படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார் படத்தின் நாயகன் அக்சய் குமார். இவர் மூன்றே நிமிடங்களில் 184 செல்ஃபி படங்களை எடுத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறார். இதற்கு முன் இந்த சாதனையை டபிள்யூ டபிள்யூ இ சாம்பியனான டுவைன் ஜான்சன் என்ற ராக் 2015 ஆம் ஆண்டில் இருந்து தன் வசம் வைத்திருந்தார்.

அவர் 2015 ஆம் ஆண்டு லண்டனில்  வைத்து நடைபெற்ற சன் ஆன்ட்ரியாஸ் திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்வில் மூன்று நிமிடங்களில் 105 செல்ஃபிகளை எடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருந்தார். இந்த சாதனையை தற்போது முறியடித்திருக்கிறார் அக்சய் குமார். மூன்று நிமிடங்களில் 184 செல்ஃபி எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறார்.

இந்த சாதனையின் காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர்  இந்த சாதனைகள்  அனைத்தையும் என் ரசிகர்களுக்கே சமர்ப்பிக்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார். "இத்தனை ஆண்டு காலமாக என்னுடைய வெற்றி மற்றும் தோல்விகளில் என்னுடைய இணைந்திருக்கும் என் ரசிகர்களுக்கே, என் சாதனைகள் அனைத்தும் சமர்ப்பணம்" எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அக்சய் குமார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bollywood star akshay kumar creates new guiness record by defeating wwe champion rock


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->