சன்னி லியோன் நிகழ்ச்சியில் குண்டு வெடிப்பு சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நட்சத்திரமாக நடித்து வருபவர் நடிகை சன்னி லியோன். கவர்ச்சி படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்ட சன்னி லியோனின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகும். இந்திய வம்சாவளியை சார்ந்த சன்னி லியோன் அமெரிக்காவில் பிறந்தார். 

ஆபாச படங்களில் நடித்து வந்த இவர் பிறகு பாலிவுட் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்தார். இவர் jism 2 என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரை உலகிலும் பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

 

இவர் தமிழில் ஜெய், சுவாதி ரெட்டி, ஆர் ஜே பாலாஜி போன்ற நடிகர்கள் நடித்த வடகறி என்ற படத்தின் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மற்றும் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் ஹட்டா கேங்ஜெய்பங் பகுதியில் மாடல் அழகிகளுக்கான பேஷன் ஷோ நிகழ்ச்சி நடந்தது.

அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தார். பேஷன் ஷோ நடைபெறும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் காலையில் 6:30 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடிப்பால் யாருக்கும் எந்த விதமான காயமும் இல்லை. சன்னி லியோன் கலந்து கொள்ள முடிவாகி இருந்த நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அவரது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb blast In Sunny Leone Manipur program


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->