ஆர்யாவுக்காக இறங்கிவந்த சந்தானம்.! சந்தானம் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ஆர்யா மற்றும் சந்தானம் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான திரைப்படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். சிவா மனசுல சக்தி பட இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கிய இரண்டாவது திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்து இருப்பர்.

நகைச்சுவை மற்றும் காதல் கதையை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருப்பார். இதில் ஜீவா ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .மேலும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். 

இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் கடந்த நிலையில் இதன் இரண்டாவது பாகம் வெளியாகும் என்று அடிக்கடி தகவல் வெளியாகி வரும். ஆனால், இதுவரை அது குறித்த உறுதியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்துவந்தது. 

இத்தகைய நிலையில் தற்போது உண்மையிலேயே பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்திற்கு சந்தானம் மற்றும் ஆர்யா இருவரும் தயாராக இருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் இதையும் ராஜேஷ்தான் இயக்கப்போகிறார் என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் இருக்கும் ஒரு சிக்கல் என்னவென்றால் சந்தானம் 2010இல் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால், தற்போது அவர் ஹீரோவாக நடிக்கிறார். இத்தகைய நிலையில், ஆர்யாவுடன் நகைச்சுவை வேடத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் நண்பருக்காக சந்தானம் இறங்கி வந்து ஓரளவிற்கு நகைச்சுவை கதாபாத்திரமும் ஹீரோ ரேஞ்சில் இருந்தால் நடிக்கலாம் என்று காம்ப்ரமைஸ் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boss enkira baskaran movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->