ஐசிசி ஒருநாள் தரவரிசை: பேட்டிங்கில் 02-வது இடத்தில் ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சில் 04-வது இடத்தில் தீப்தி சர்மா..!
ICC ODI rankings Smriti Mandhana is 2nd in batting
ஐசிசி மகளிருக்கான ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 02-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசி மகளிருக்கான ஒருநாள் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டது.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 41, 73, 135 ரன்கள் எடுத்த, மந்தனா ஒருநாள் தரவரிசையில்02-வது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன், டி20 தரவரிசையில் 2வது இடத்தில் தொடர்ந்தும் நீடிக்கிறார்.
அத்துடன், மகளிர் அணியின் கேப்டன் கவுர் ஒரு இடம் பின்தங்கி 15-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். டி20 தரவரிசையில் அவர் 12வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் 02 இடம் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார்.டி20 தரவரிசையில் 14வது இடத்தில் நீடிக்கிறார்.
மேலும், பந்துவீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் ஒரு இடம் முன்னேறி 04-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 03வது இடத்தைப் பிடித்துள்ளார்.
English Summary
ICC ODI rankings Smriti Mandhana is 2nd in batting