தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கபட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

கல்வி தகுதி :- 1. நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் Special Education in Intellectual Disability பிரிவில் பெற்று இருக்க வேண்டும்.

2. தொழிற்சார் சிகிச்சையாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை அல்லது முதுகலை Occupations Therapy பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.சமூக சேவகர் காலிப்பணியிடத்திற்கு Master of Social work (MSW) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 40 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

சம்பளம் : மாத ஊதியமாக 23,000 இருந்து 23,800 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:- விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செலுத்த வேண்டிய முகவரி : செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்,மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்-627811.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in tenkasi district government hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->