திமுக எம்பி கல்லூரியில் ரூ.13.7 கோடி பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி! - Seithipunal
Seithipunal


திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில்  ரூ.13.7 கோடி  மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ள திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில்  அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இந்த நிலையில், ஜனவரி 4ந்தேதி அன்று காலை  அங்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல்   கல்லுாரியில் ஜனவரி 4 மற்றும் 5ந்தேதி இன இரு நாட்கள் தொடர் சோதனையை அமலாக்கத்துறை மேற்கொண்டது. சுமார் 44 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

அத்துடன், கதிர் ஆனந்துக்கு சொந்தமான குவாரி,  துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் வீடுகள், அலுவலகங்கள், தோட்டங்களிலும் சோதடின  மேற்கொண்டனர். அப்போது, அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்தார். எம்.பி கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார்.

பின்னர் துரைமுருகன் வீட்டை, உடைத்து,  காட்பாடி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்தப்பபட்டது. இதையடுத்து இந்த சோதனை குறித்து முறையாக தகவல்களை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.

இந்த நிலையில், திமுக எம்.பி. கதிர்ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டது என்னென்ன என்பது குறித்து   அமலாக்கத்தறை தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி,  கதிர்ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கதிர் ஆனந்த் வீட்டின் லாக்கரை உடைத்ததில் அதில் இருந்து ரூ.75 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் கல்லூரியில் இருந்து ஹார்ட் டிஸ்க் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் திமுக எம்.பி கதிர் ஆனந்தின் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை திரட்டி வருவதாகவும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கம்ப்யூட்டரில் கிடைத்த தகவல்கள் பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

  Enforcement Directorate seizes Rs 13.7 crore from M B Kathir Anand College


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->