லியோ படத்தின் தீம் பாடலை பாடிய சிறுவன்.! பிரமித்து போன அனிருத்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் திரி படத்தின் வொய் திஸ் கொலவெறி டி பாடல் மூலம் அறிமுகமானவர் அனிருத். பிரபல இசையமைப்பாளரும், பின்னணி பாடகர்களில் ஒருவருமான இவர் எதிர் நீச்சல், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி, வணக்கம் சென்னை ஜெயிலர், லியோ உளியிட்ட பல பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் அனிருத் தற்போது அமெரிக்காவில் நடத்திக்கொண்டிருக்கும் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம்’ இசை கச்சேரிக்காக சுற்றுப்பயணம் செய்து பல பாடல்களை பாடிவருகிறார்.

அந்த வகையில் அனிருத் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற முதல் நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று முன்தினம் நியூஜெர்சியில் தங்களது அடுத்த நிகழ்ச்சியை அனிருத் குழுவினர் நடத்தி முடித்துள்ளனர். 

அப்போது ரசிகர்கள் பல பேருடன் கலந்துரையாடிய அனிருத், அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த நேரத்தில் சிறுவன் ஒருவன் லியோ படத்தின் தீம் பாடலை அனிருத்தின் முன்பு பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அனிருத், தான் அணிந்திருந்த கூலிங்கிளாஸையே அவருக்கு பரிசாக அளித்து அந்த சிறுவனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy sang leo theme song before aniruth in america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->