பிரபல பாலிவுட் நடிகை மீது மோசடி புகார்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபுதேவாவுடன் 'மிஸ்டர் ரோமியோ' என்ற படத்தில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி. இதைத் தொடர்ந்து அவர் தமிழில் விஜய்யின் 'குஷி' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். பின்னர் ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மும்பையில் நிறைய தொழில்களில் முதலீடு செய்து வந்த இவரின் சொத்து மதிப்பு ரூ.134 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆபாச படம் தயாரித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த புகாரில் ராஜ்குந்த்ரா கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தங்க நகை திட்டம் மூலம் ஷில்பா ஷெட்டியும், ராஜ்குந்த்ராவும் தன்னை மோசடி செய்துவிட்டதாக வியாபாரி ஒருவர் மும்பை கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பித்தார். அந்தப் புகாரின் படி ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

criminal case file on pollywood actor shilpa shetty


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->