பாகுபலி இயக்குனர் சித்ரவதையால் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டாரா? - Seithipunal
Seithipunal


தெலுங்கு பட தயாரிப்பாளரான  சீனிவாசராவ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருடைய தற்கொலைக்கு காரணம் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜ மவுலி தான் செய்திகள் வெளியாகிறது.

ராஜ மவுலியின் நண்பர் சீனிவாசராவ்.  இவர் சினிமா நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்தவர். இவர் தற்கொலைக்கு முன்பாக அவர் செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அதில் இயக்குனர் ராஜமவுலி தன்னை மிகப்பெரிய சித்ரவதைக்கு உட்படுத்தினார். அவருடைய நடவடிக்கை என்னை தற்கொலைக்கு தூண்டியது என தெரிவித்து, அந்த வீடியோவை அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, பாகுபலி இயக்குனர் ராஜா மௌலி மீது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும்,  அவரை பொய் கண்டுபிடிப்பு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

ஆனால், இது குறித்து போலீசார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன், ராஜமவுலி மற்றும் அவரது குழுவினர் இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தென்னியந்திய திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Note;- தற்கொலை ஒருபோதும் எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள உங்களுக்கு உதவி தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தயவுசெய்து பின்வரும் உதவி எண்களை அழைக்கவும்:

தமிழக சுகாதார சேவை உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050

இந்த எண்கள் மூலம், மனநல ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did a Telugu film producer commit suicide due to the harassment of Baahubali director


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->