ஆசிய சிங்கங்கள் பாதுகாப்பு; ரூ.2,900 கோடி ஒதுக்கீடு; மத்திய அரசு ஒப்புதல்..! - Seithipunal
Seithipunal


ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக ரூ.2,927.71 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. குறித்த திட்டத்திற்கு, கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. 

இது குறித்து குஜராத் தகவல் துறை வெளியிட்ட செய்தியில், 2020-ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, குஜராத்தில் 30 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் 09 மாவட்டங்களில் 53 தாலுகாக்கள் முழுவதும் 74 சிங்கங்கள் பரவி காணப்படுகின்றன. இந்த சூழலில், அவற்றை பாதுகாக்கும் திட்டம் சிங்கங்களின் நலனுக்கான நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஆசிய சிங்கங்களை பாதுகாப்பது மற்றும் அவற்றின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும்,அவற்றின் வாழ்விட மேலாண்மை வழியே மற்றும் சமூக மக்களின் பங்கேற்புடன் அவை நீண்டகாலம் வாழ்வது உறுதி செய்யப்படுவது ஆகியவற்றுக்காக இந்த திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டமானது, மனித வனவிலங்கு மோதல் குறைக்கப்படுதல், சுற்றுலா வளர்ச்சி, அறிவியல் ஆராய்ச்சி, பயிற்சி, சுற்றுச்சூழல் வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்ட பரவலான செயல் திட்டங்களை உள்ளடக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக 162 ஆண்கள், 75 பெண்கள் 2024-ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் வனவாழ் அவசரகால தேவைக்கு ஏற்ப, உடனடியாக செயல்பட ஏதுவாக 92 மீட்பு வாகனங்களும் உள்ளன என்று கூறப்படுகிறது.

மேலும், 55,108 திறந்த நிலையிலான கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வனவாழ் பாதுகாப்பில்  இந்தியா உலகளாவிய தலைவராக தன்னை நிலை நிறுத்தி கொள்வதில் இந்த திட்டம் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது இந்தியாவின் வனவாழ் பாதுகாப்பு பயணத்தில் இது ஒரு வரலாற்று தருணம் என்ற வகையிலும் இந்த திட்டம் அமையவுள்ளதாக கூறப்படுகிறது.



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The central government has approved an allocation of Rs 2900 crore for Asiatic lion conservation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->