கனவில் சிவலிங்கம்; பழங்கால கோவிலின் லிங்கத்தை திருடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 08 பேர்..!
8 people from the same family stole the Shivalinga from an ancient temple
துவாரகாவில் உள்ள பழங்கால பீத்பஞ்சவ் மகாதேவ் கோவிலில் இருந்த சிவலிங்கத்தை ஒரே குடும்பத்தினரை சேர்ந்த 8 பேர் திட்டமிட்டு திருகியுள்ளனர். இவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிப்ரவரி 26 அன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு, குஜராத்தின் துவாரகாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்து ஒரு சிவலிங்கத்தைத் இவர்கள் திருடியுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து துவாரகா எஸ்.பி நிதிஷ் பாண்டே கூறியதாவது: குஜராத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர், கனவில் கண்ட லிங்கத்தை வீட்டிற்கு எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ய தீர்மானித்துள்ளனர். அவர்கள் இதற்காக 500 கி.மீ., பயணம் செய்து துவாரகாவில் பல நாட்கள் தங்கி திட்டம் தீட்டியுள்ளனர்.

துவாரகாவில் உள்ள ஹர்ஷத்தின் பழங்கால பீத்பஞ்சன் மகாதேவ் கோவிலில் இருந்து சிவலிங்கம் திருடப்பட்ட பிறகு, ஆரம்பத்தில் அது கடலில் வீசப்பட்டதாக சந்தேகித்தோம். ஆனால், துவாரகாவிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத்நகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் அதைத் திருடியது பின்னர் தான் கண்டுபிடித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்களிடம் இடம்பெற்ற முதற்கட்ட விசாரணையில், குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு கனவில், பீத்பஞ்சன் மகாதேவ் கோவிலின் சிவலிங்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்து அதை பிரதிஷ்டை செய்வது அவர்களின் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வந்து செழிப்பைத் தரும் என்று நம்பி உள்ளனர்.

இவ்வாறு அந்த பெண் கனவு கண்டது தான் குடும்பத்தை சிவலிங்கத்தைத் திருடத் தூண்டியது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், திருட்டைச் செய்ய, ஏழு முதல் எட்டு குடும்ப உறுப்பினர்கள் துவாரகாவுக்குச் சென்று சில நாட்கள் அங்கேயே தங்கியுள்ளனர். அவர்கள் கோவிலில் ஒரு ஒத்திகை நடத்தி, சிவலிங்கத்தைத் திருடிய பிறகு, வீடு திரும்பி மகாசிவராத்திரி அன்று அதை தங்கள் வீட்டில் நிறுவிவியுள்ளதாக தெரிவித்துள்ளார்
இவ்வாறு திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட எட்டு பேரையும் நாங்கள் கைது செய்ததாகவும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு திட்டத்தை வகுத்து அதைச் செயல்படுத்தினர் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களும், வன்ராஜ், மனோஜ் மற்றும் ஜகத் என அடையாளம் காணப்பட்ட மற்ற குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட சிவலிங்கம் போலீசாரால் மீட்கப்பட்டு துவாரகாவில் உள்ள கோவிலில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது என நிதிஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
English Summary
8 people from the same family stole the Shivalinga from an ancient temple