டொனால்ட் டிரம்பால் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறேன்; ஜேம்ஸ் கேமரூன் அதிர்ச்சி..!
James Cameron says he leaving the US because of Donald Trump
ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக், அவதார், டெர்மினேட்டர் என பல வெற்றிப் படங்களை இயக்கியவர். அத்துடன் ஆஸ்கர் விருதுகளை வென்றவர் என சாதனைக்கும் சொந்தக்காரர். ஜேம்ஸ் கேமரூன் கனடாவில் பிறந்து, தனது 17 வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.
இந்நிலையில், அவர் ஒரு பேட்டியொன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முகத்தை நாள்தோறும் பார்க்க விரும்பவில்லை, அமெரிக்காவை விட்டு வெளியேறி நியூசிலாந்தில் நிரந்தரமாக குடியேற போவதாக கூறியுள்ளார்.

இந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: ''அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது கொடூரமானது. டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா ஒழுக்கமான அனைத்து விஷயங்களில் இருந்தும் விலகுவதாக நான் பார்க்கிறேன். அமெரிக்கா எதனுடன் இணைந்திருக்கவில்லை என்றால், அது வரலாற்று ரீதியாக நிற்க முடியாமல் போய்விடும். இது மிக மோசமான யோசனையாக மாறிவிடும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் மேலும் கூறுகையில், ''தினந்தோறும் வரும் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் முழுமையாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்கிறேன். அதற்குக் காரணம், அது என்னை வேதனைப்பட வைக்கிறது. நியூசிலாந்து நாளிதழ்களில் சற்று வேறு மாதிரியாக உள்ளது. அங்கு அவர்கள் 03-வது பக்கத்திலாவது போடுகிறார்கள்.'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''டிரம்ப்பின் முகத்தை தினமும் நாளிதழின் முதல் பக்கத்தில் பார்க்க விரும்பவில்லை. இது மீண்டும் மீண்டும் கார் விபத்தை பார்ப்பது போல் உள்ளது. நியூசிலாந்து நாட்டில் உடனடியாக குடியேற கேட்டு இருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குடியெபர்ந்து விடுவேன்.'' என்று ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளமை தற்போது வைரலாகி வருகிறது.
English Summary
James Cameron says he leaving the US because of Donald Trump