அழகி பட நடிகையின் இயக்கத்தில் உணவு டெலிவரி கதை! இணைய தளத்தில் நல்ல வரவேற்பு! - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் கதாபாத்திரங்களை வைத்து கதைக்களம் வைத்துள்ளார் இயக்குனர் நந்திதா தாஸ்!

பார்த்திபன் நடித்த அழகி படம் மூலம் தமிழ் ரசிகர் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா தாஸ். இவர் குறும்படம், இசை ஆல்பம் ஆகியவற்றை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வரப்போகும் மூன்றாவது திரைப்படம் ஸ்விகாட்டோ (Zwigato). இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

அட்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நந்திதா தாஸ் இன்டர்நேஷனல் இணைந்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. உணவு டெலிவரி செய்யும் நபரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது. 

தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகருமான கபில் சர்மா இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டொரோண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்த இப்படம் தேர்வாகி இருக்கிறது. 

ஒரு உணவு டெலிவரி நபரின் போராட்டமிக்க வாழ்க்கையை அப்படியே கண் முன் நிறுத்தும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு நிமிடம் 40 வினாடிகள் ஓடும் டிரெய்லரில் மேலாளர் வேலை செய்யும் நபர் கொரோனா நோயால் வேலை இழந்து உணவு டெலிவரி செய்யும் பணியை செய்கிறார் என இக்கதை அமைந்துள்ளதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

டிரெய்லர் லிங்க் இணைக்கப்பட்டுள்ளது. 

https://m.youtube.com/watch?v=Cvw6ohO08lU


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Nandidas has set the plot based on the daily characters


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->