கட்டாய ஹெல்மெட் சட்டத்தை மறு பரிசீலினை செய்ய வேண்டும..அதிமுக தீர்மானம்!
The mandatory helmet law needs to be reconsidered AIADMKs decision
புதுச்சேரியில் தேசிய நெடுஞ்சாலை தவிர்த்து நகரப் பகுதியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை முதல்வர் ரங்கசாமி மறு பரிசீலினை செய்ய வேண்டும் என்று இன்று நடந்த அதிமுக நிர்வாகிளுடனான ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் இன்று அதிமுக நிர்வாகிளுடனான ஆலோசனை மாநிலத்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.அப்போது புதுச்சேரியில் நிலவிவரும் அரசியல் நிலவரம் மற்றும் மக்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் புதுச்சேரியில் வரும் 12-ம் தேதியிலிருந்து கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கொண்டு வருவது முரண்பாடான என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முக்கியமான தீர்மானம் பின்வருமாறு: டெல்லியில் இருந்து பணிக்காக வருகை தரும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏற்கெனவே மூன்று முறை கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தி மக்களுடைய எதிர்ப்புக்கு பிறகு அதை வாபஸ் பெறுவது தொடர்கதையாக இருந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பல மாநிலங்களில் விற்பனை ஆகாத பல லட்சம் ஹெல்மெட்டுக்கள் விற்பனைக்கு இதுபோன்ற உத்தரவுகள் துணை நின்றன.
வரும் 12-ம் தேதியிலிருந்து கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கொண்டு வருவது முரண்பாடான செயலாகும். போக்குவரத்து நெரிசல் மிக்க புதுச்சேரி நகரப் பகுதியில் மணிக்கு 20 கி.மீ வேகத்துக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத நெருக்கடியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் என்பது அவசியமற்றது. தேசிய நெடுஞ்சாலை தவிர்த்து நகரப் பகுதியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை முதல்வர் மறு பரிசீலினை செய்ய வேண்டும் என்று இன்று நடந்த நிர்வாகிளுடனான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
English Summary
The mandatory helmet law needs to be reconsidered AIADMKs decision