மன்னிப்பு என்ற வார்த்தையில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது - இயக்குநர் பேரரசு.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில், இயக்குநர் பேரரசும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்!

அவர்களின் பேச்சில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது!

சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் என்று சொன்னது,

ஏ.வி.ராஜூ என்பவர் இப்பொழுது திரிஷா அவர்களின் பெயரை குறிப்பிட்டு கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும்!

ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது.

இந்த மாதிரியான அநாகரீக செயலுக்கு பாதிக்கபட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்" என்றுத் தெரிவித்திருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director perarasu condemned av raju speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->