மீண்டும் சினிமாவில் களமிறங்கும் பிரபல நடிகரின் மகள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் அப்பாவைப் போல படங்களில் நடிக்காமல், கேமராவுக்கு பின்னால் இருக்கும் பணிதான் என்பதை முடிவு செய்து செயல்பட்டு வருகின்றனர். 

இவர்களில் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷூடனான பிரிவுக்குப் பின்பு இயக்கத்தில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இப்போது அவரது இயக்கத்தில் ‘லால் சலாம்’ படம் வெளியாகவுள்ளது. இதேபோல், இளைய மகள் செளந்தர்யாவும் இதற்கு முன்பு ‘கோச்சடையான்’, ‘விஐபி2’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், திருமணம், குழந்தை என சினிமாவுக்கு பிரேக் கொடுத்த இவர் இப்போது மீண்டும் இயக்கத்திற்கு வருகிறார். தற்போது அவர் உருவாக்கி இருக்கும் கதையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். 

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ரஹ்மான் அல்லது ஜிவி பிரகாஷ் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director soundarya direct new movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->